Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சஞ்சய்தத் மீண்டும் சிறை செல்வாரா? முன்கூட்டியே விடுதலை செய்த விவகாரத்தில் சிக்கல்


sivalingam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (06:02 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? எந்த அடிப்படையில் அவர்  விடுதலை செய்யப்பட்டார் என நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளதால் மகாராஷ்டிரா அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.


 


கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய்தத் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தீர்ப்பை அடுத்து அவர் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். ஆனாலும் அவ்வப்போது அவர் இடைப்பட்ட காலத்தில் பரோலில் வெளியே வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பே அதாவது எட்டு மாதங்களுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலையை எதிர்த்து புனேவை சேர்ந்த பிரதீப் பலேகர் என்பவர் மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'எந்த அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு முன் கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது? டி.ஐ.ஜி., சிறை கைதிகள் ஆலோசனை செய்தார்களா? அல்லது சிறை கண்காணிப்பாளர் தனது பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பினாரா என்று மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நீதிபதிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :