1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஜூலை 2018 (09:32 IST)

நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மோடி தான் - நடிகை கங்கனா ரணாவத்

நாட்டின் மிகச்சிறந்த தலைவராக  பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் கேங்ஸ்டர் என்ற இந்தி படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மிகச்சிறந்த தலைவராக மோடி இருக்கிறார் எனவும் நாட்டை படுகுழியில் இருந்து மீட்க 5 வருடம் என்பது போதாது என்றும் கூறினார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்றார்.
 
மேலும் மோடி தனது பெற்றோரால் இந்த நிலையை அடையவில்லை.  தனது கடின உழைப்பினாலேயே அவர் உயர்ந்துள்ளார் என கங்கனா தெரிவித்தார். வரும் காலங்களில் அரசியலில் நுழைந்து நாட்டிற்காக சேவை செய்வேன் என்றார்.