Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்த போலீஸ்காரர் தவறாக நடந்து கொண்டார் - நடிகை சார்மி புகார்

வியாழன், 27 ஜூலை 2017 (17:42 IST)

Widgets Magazine

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில், விசாரணைக்கு சென்ற போது ஒரு போலீஸ்காரர் என்னை தொட்டு தள்ளினார் என தெலுங்கு நடிகை சார்மி புகார் அளித்துள்ளார்.


 

 
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை சமீபத்தில் ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஐதராபாத்திற்கு போதை பொருட்களை கடத்தி வந்து, ஒரு தரகர் மூலம் தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலருக்கு போதை மருந்துகளை சப்ளை செய்வதாக வாக்குமூலம் அளித்தார். 
 
இதையடுத்து, அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட சிலரின் செல்போன் எண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்ளிட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.  தற்போது அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.


 

 
அந்நிலையில், சமீபத்தில் நடிகை சார்மி போலீஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார். அப்போது, ஸ்ரீனிவாஸ் என்கிற என்னை தொட்டு தள்ளினார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நான் விசாரணைக்கு வரும்போது அங்கு கும்பலாக இருந்தது. எனவே, அவர்களை கடந்து செல்வதில் எனக்கு சிரமம் ஏற்பட்டது. அங்கு பல பெண் போலீசார் நின்றிருந்தனர். ஆனால், எனக்கு பாதுகாப்பு தருகிறேன் எனக்கூறி, அவர் என்னை தொட்டு தள்ளினார். அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் அபராதம் - சென்னை டிராஃபிக் போலீசார் அதிரடி

சென்னையில், இனிமேல் நீங்கள் டிராஃபிக் போலீசாரிடம் சிக்கினால் உங்களிடம் உள்ள டெபிட் அல்லது ...

news

குரங்கை வைத்து பாலியல் தொழில்: பணத்திற்காக பெண் செய்த காரியம்!

ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் மேடம் என்ற பெண் ஒருவர் பணத்துக்காக குரங்கு ஒன்றை ...

news

கலாம் நினைவு நாள் - 108 ஆத்திச்சூடியை 3 நிமிடத்தில் கூறி சாதனை செய்த சிறுமி - வீடியோ

முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தில் அவர் கண்ட சாதனையை பறைசாட்டும் ...

news

வியூகத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாஜக: சாய்ந்தது பீகாரின் மெகா கூட்டணி!!

லாலு மற்றும் நிதிஷ் குமாரின் மெகா கூட்டணியை உடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்களாம் ...

Widgets Magazine Widgets Magazine