திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (16:18 IST)

நடிகை வழக்கு - திலீப், காவ்யா மாதவன் தலைமறைவு

கேரள நடிகை காரில் கடத்தப்பட்ட வழக்கில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் நடிகர் திலீப் மற்றும் அவரின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகையை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் அவரிடமும், அவரது மேலாளர் அப்புண்ணி மற்றும் இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
 
மேலும், நடிகையை காரில் கடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுனத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் கடிதத்தில் தெரிவித்ததை அடுத்து, காவ்யா மாதவனின் கடையில் போலீசார் கடந்த 1ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
 
மேலும், திலீப் மற்றும் காவ்யா மாதவனுக்கு எதிராக பல முக்கிய வலுவான ஆதரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதால் அவர்கள் இருவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது.
 
இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக தற்போது தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.