வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (12:47 IST)

ஆன்லைனில் தங்கு தடையின்றி கிடைக்கும் ஆசிட்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

acid
ஆன்லைனில் தங்கு தடையின்றி  ஆசிட் கிடைப்பதால் குற்றங்கள் பெருகி வருகிறது என்றும் குறிப்பாக பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசிய குற்றத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது ஆன்லைனில் ஆசிட் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைனில் தங்கு தடை இன்றி ஆசிட் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது
 
ஆசிட் வாங்க வருபவர் தகுந்த காரணத்தை விளக்கி அடையாள ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே ஆசிட் வாங்க முடியும் என்ற முறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு மாறாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்து வருவதாகவும் காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளன. 
 
இந்த நிலையில் ஆன்லைனில் ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran