திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (19:55 IST)

கூகுளில் பாலியல் புகார் : பல கோடி இழப்பீடு

உலகில் உள்ள  இணையதளங்களில் கூகுள் தனி சாம்ராஜ்யமே நடத்திக்  கொண்டிருக்கின்றன. ஆனால் இன்றைய கணினி உலகில் அத்துனை துறைகளிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக புகார் வந்தன. இதில் கூகுள் நிறுவனமும் தப்பவில்லை. 
கூகுள் நிறுவனத்தில் ஒரு பிரிவான கூகுள் சர்ச் நிறுவனத்தில் துணைத் தலைவாக பணியாற்றி வந்த அமித் சிங் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததை அடுத்து அமித் சிங் 2016 ஆம் ஆண்டு விலகினார்.
 
ஆனால் கூகுள் விட்டு அமித் வெளியேற கூகுள் எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தது என்பது ரகசியமாகலவே இருந்தது.இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் அமித்துக்கு 3 ஆண்டுகளுக்கு  ரூ,. 4.5 கோடி டாலர் நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.