வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 ஜூலை 2017 (22:22 IST)

மக்களின் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்: காலத்தால் அழியா மனிதர்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். நாளை அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.


 
 
அப்துல் கலாம் வரலாறு: 
 
அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15,1931-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.
 
அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தனது 83வது அகவையில் காலமானார். 

 
இந்தியாவின் ஏவுகணை மனிதர்: 
 
1960 ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார்.
 
பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார். 
 
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.


 

 
மக்களின் ஜனாதிபதி:
 
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.
 
மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 3 வது குடியரசுத் தலைவராவார். 
 
அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை. மேலும், பாரத் ரத்னா, பத்மா விபூஷன், பத்ம பூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
 
நினைவிடம்:
 
பேய்க்கரும்பு டாக்டர் அப்துல் கலாமின் உடல் இருக்கும் இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள கலாம் நினைவிடம் ரூ.15 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார்.