1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (15:08 IST)

ஆம் ஆத்மி கட்சியில் பிளவு?: யோகேந்திர யாதவ் மறுப்பு

ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திராவ் மறுத்துளளார்.
 
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
 
இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பேசிவருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதை அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் மறுத்துள்ளார்.
 
இது குறித்து யோகேந்திர யாதவ் கூறியதாவது: "கடந்த 2 நாட்களாகவே என்னைப்பற்றியும் பிரசாந்த் பூஷன் பற்றியும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
 
அடிப்படை ஆதாரமற்ற பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன. அது சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறது. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சில சமயம் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இதனை ஒதுக்கி விட்டு நிறைந்த மனதுடன் பணியாற்ற வேண்டும்" இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.