திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (10:46 IST)

உதயநிதி ஒரு சிறிய தலைவர், அதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது: ஆம் ஆத்மி கட்சி

aam aadmi party
சனாதனம் குறித்து சிறிய தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  இந்தியா கூட்டணியை அதிகாரபூர்வ அறிவிப்பாக அதை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சாதா என்பவர் கூறியுள்ளார் 
 
சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்தியா முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஒரு சில தலைவர்களே இதற்கு கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சாதா இது குறித்து கூறிய போது சனாதனம் குறித்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏதேனும் ஒரு சிறிய தலைவர் சொல்லும் கருத்தை இந்தியா கூட்டணியின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
உதயநிதியின் பெயரை அவர் சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் குறிப்பிட்டு சொல்வதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva