செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (21:33 IST)

நீட் தேர்வுக்கு ஆதார் தேவையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் போன்ற முக்கிய தேர்வுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்

நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று சி.பி.எஸ்.இ சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என்றாலும் பாஸ்போட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று உத்தரவிட்டதோடு, இதனை, சி.பி.எஸ்.இ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது