1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (09:49 IST)

இளம்பெண்ணின் சடலத்துடன் உடலுறவு: கர்நாடகாவில் கொடூரம்

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று அவரை கொன்று அவரது உடலுடன் உடலுறவு கொண்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர், பணி முடிந்த பின்னர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
 
பேருந்து நிலையத்தில் அந்த பெண்ணை பார்த்த வாலிபர், தாம் டிராப் செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த வாலிபருடன் பைக்கில் சென்றுள்ளார்.
 
சற்று நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வாலிபர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். ஆனால் அந்த பெண் விடாமல் போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொடூரன் இளம்பெண்ணை கழுத்தை நெறுக்கி கொலை செய்துவிட்டு அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளான். பின்னர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளான்.
 
இந்நிலையில் இந்த கொடூர கொலை குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்த போலீஸார், அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து கற்பழித்த அயோக்கியனை கைது செய்தனர். இந்த மனித மிருகத்தை கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.