திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (15:20 IST)

காதலன் கண் முன்னே காதலி பாலியல் பலாத்காரம்

கோவாவில் காதலன் கண் முன்னே காதலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கடற்கரையில் அமர்ந்து  காதலர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அங்கு வந்த சஞ்சீவ் தனஞ்சேய் பால், ராம் சந்தோஷ் பரியா உள்ளிட்ட சில மனித மிருகங்கள் காதலர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் அத்திரமடைந்த கும்பல் காதலன் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.