வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (11:51 IST)

எச்.ஐ.வி பாதித்த பெண் தற்கொலை: லட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றிய மக்கள்

கர்நாடகாவில் எச்.ஐ.வி பாதித்த பெண் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதால் ஊர் மக்கள் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெறியேற்றினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள முராப் என்ற கிராமத்தில் எச்.ஐ.வி பாதித்த பெண் ஒருவர் அங்கிருக்கும் ஜகிர்தார் என்ற ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஊர் மக்கள் ஏரியில் வரும் தண்ணீரை பயன்படுத்த மறுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த மாதிரி நீரில் தொற்று எல்லாம் பரவாது எனவும் அந்த பெண் உயிரிழந்ததும், எச்.ஐ.வி கிருமிகளும் அழிந்திருக்கும் என கூறினார். அதிகாரிகள் என்ன தான்  கூறினாலும் பொதுமக்கள் அவர்களின் பேச்சை கேட்கவில்லை. ஏரியில் இருக்கும் மொத்த தண்ணீரையும் வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
 
வேறு வழியின்றி 23 ஏக்கர் பரபளவுள்ள அந்த ஏரியில் இருந்த லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.