நண்பர் உருவத்தில் வாட்ஸ்-அப்பில் அழைப்பு: AI தொழில்நுட்பத்தில் மோசடி..!
AI தொழில்நுட்பம் மூலம் நண்பன் போலவே வீடியோ கால் அழைத்து மோசடி செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
AI தொழில்நுட்பத்தில் ஒரு நபரை அச்சுஅசலாக மாற்றி விடலாம் என்பதும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கும் நபருக்கும் ஒரிஜினல் நபருக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமும் இல்லாத வகையில் இந்த தொழில்நுட்பம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேரளாவில் AI தொழில்நுட்பத்தின் மூலம் ராமகிருஷ்ணன் என்பவரது நண்பர் போலவே வீடியோ கால் பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் 40000 மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு மீண்டும் அவர் பணம் கேட்க சந்தேகம் அடைந்த ராமகிருஷ்ணன் தனது நண்பருக்கு போன் செய்தபோது தான அவ்வாறு போன் செய்யவில்லை பணமும் கேட்கவில்லை என்றது தெரிவித்தார்
இதனை அடுத்து ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்த நிலையில் பணம் பெற்றவரின் பங்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தின் மூலம் போலி வீடியோக்களை பயன்படுத்தி மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva