வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (09:16 IST)

மீண்டும் ஒரு ரயில் விபத்து.. என்ன நடக்குது ரயில்வே துறையில்..?

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  இன்று மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்  இன்று  பிரயாக்ராஜ் என்ற ரயில் நிலையத்திற்கு வந்தது.  அந்த ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென ரயில் இன்ஜினில் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த விபத்தில் என்ஜினுக்கு பின்னால் இருந்த 2 ரயில் பெட்டிகளும் தடம் புரண்டதாகவும் ஆனால் பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் கூறப்படுகிறது.  

இந்த விபத்து குறித்து  விசாரணை செய்யப்பட்டது வரும் நிலையில் மாற்று என்ஜின் மூலம் ரயில் புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ரயில் விபத்து ஏற்பட்டு கொண்டு வருவதால் ரயில்வே துறை என்ன செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Edited by Siva