பெண் உள்ளாடை அணிந்திருந்த சைகோ; பெண்ணிடம் ஆபாச சைகை - போலீசார் வலைவீச்சு


Murugan| Last Updated: புதன், 9 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
பெண் உள்ளாடை அணிந்து வந்த ஒரு சைக்கோ வாலிபர், சாலையில் தனியாக நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ஆபாச சைகை செய்த விவகாரம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், மாநகர போலீசாரின் முகநூல் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
 
கடந்த 6ம் தேதி நான் எனது கணவருடன் நைஸ் சாலையில் பன்னரகட்டாவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, எங்களின் கார் பழுதடைந்தது. எனவே, மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக, அந்த வழியாக வந்த மற்றொரு வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றவிட்டார் என் கணவர். நான் தனியாக நின்று கொண்டிருந்தேன்.
 
அப்போது, உதட்டில் சாயம் பூசி, பெண் அணியும் உள்ளாடையை அணிந்த படி ஒரு சைக்கோ வாலிபர் என் அருகே வந்தார். என்னை உற்று பார்த்த அவர், என்னிடம் ஆபாச சைகை காட்டி என்னிடம் தவறாக நடக்க  முயன்றார். என் செல்போனில் அவரை படம் எடுக்க முயன்றதும், தனது கையில் வைத்திருந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவரது புகாரை ஏற்ற போலீசார், அந்த சைக்கோ வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர். 
 
புகார் கொடுத்த அப்பெண், பெங்களூரில் நடைபெற்ற திருமதி அழகி போட்டிகளில் கலந்து கொண்டவர் ஆவார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :