1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 மே 2022 (21:01 IST)

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுப்பு: இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ்

indigo
இன்டிகோ விமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சிவில் சர்வீஸ் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் பயணம் செய்ய முயற்சித்த போது அந்த சிறுவனை விமானத்தில் ஏற்ற இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது
 
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விவகாரம் குறித்து இண்டிகோ நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது