திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:13 IST)

கள்ளக்காதலுடன் சேர்ந்து 3 வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது!

rajastan
ராஜஸ்தான் மாநிலத்தில் காதலனின் உதவியுடன் மகளைக் கொன்று ஓடும் ரயிலில் உடலை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டிஉப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் 2 குழ்ந்தைகளையும், கணவர் 3 குழந்தைகளையும் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், சன்னி என்ற நபருடன் சன்னிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்தை மீறி  இவர்களுக்கு கள்ள உறவு இருந்துள்ளது. எனவே சுனிதாவின் 3 வயது குழந்தை இவர்களுக்குத் தொல்லையாக இருப்பதாக இருவரும் நினைத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, அந்தக் குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 3 வயது குழந்தையை கழுத்து நெறித்துக் கொன்று, காதலன் சன்னியின் உதவியுடன்,  குழந்தையின் சடலத்தை ஒரு போர்வையில் சுற்றி, ஸ்ரீகங்கா நகர் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, காலை 6.10 மணீக்கு ஒரு ரயிலில் ஏறிய இருவரும் குழந்தையின் உடலை ஒரு கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் வந்ததை அடுத்து,  சுனிதாவிடம் விசாரித்தனர்.

அவர் தன் மகளை கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, சுனிதாவையும் அவரது கள்ளக் காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.