திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (11:18 IST)

கள்ளக்காதலுக்கு தொல்லை; பெற்ற மகனின் கைகளை உடைத்த தாய்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனின் கைகளை உடைத்து பெற்ற தாயே சித்ரவதை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு திருமணமாகி 5 வயது குழந்தையும் உள்ளது. கடற்படை வீரரான அவர் விடுமுறை தினங்களில் மட்டும் மாச்சரலா வந்து மனைவி, மகனை பார்த்து செல்வார். இவ்வாறு இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாற அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களின் இந்த சந்திப்புக்கு கடற்படை வீரரின் ஐந்து வயது மகன் தடையாக இருந்துள்ளாம். இதனால் அடிக்கடி தனது மகனை அடித்த அந்த தாய், சூடு வைப்பது, வாளியில் தண்ணீர் நிரப்பி மகனை அதில் முக்குவது என்று தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

சமீபத்தில் சிறுவனின் கைகளை உடைத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளார் அந்த தாய். அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்து இருந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் தனது மகனை தன்னோடு அழைத்து சென்றுவிட்டார். கூடவே மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ள அவர் விவாஹரத்திற்கும் பதிவு செய்துள்ளார். கள்ளக்காதலுக்காக சொந்த மகனையே தாய் சித்ரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K