செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:04 IST)

பேட்டரி ஒர்க் ஆகவில்லையாம்: நடுரோட்டில் காரையே கொளுத்திய ஆசாமி – வைரலான வீடியோ

குஜராத்தில் ஆசாமி ஒருவர் தனது காரில் பேட்டரி வேலை செய்யாததால் நடுரோட்டில் காரை கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் சிங். இவர் இவரது நண்பர் நமிஷ் கோஹலுடன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுவிட்டது. சோதித்து பார்த்ததில் கார் பேட்டரி செயலிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த இந்திரஜித் மக்கள் நடமாடும் போக்குவரத்து மிகுந்த சாலை என்றும் பாராமல் வண்டியின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார். இத பார்த்து பதட்டமடைந்த மக்கள் தள்ளி ஓடிவிட்டனர். தனது நண்பர் காரை கொளுத்துவதை செல்போனில் பதிவு செய்திருக்கிறார் நமிஷ் கோஹல்.

அந்த வீடியோ இணையம் மூலம் பல இடங்களுக்கும் பரவ, இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் அந்த வீடியோவை வைத்தே இருவரையும் கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர். அவர்கள் மேல் பொது இடத்தை சேதப்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.