வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (14:39 IST)

பேஸ்புக் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை....அதிர்ச்சி சம்பவம்

abuse
திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இளைஞர்கள் சிலர், அந்த சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மா நிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவருடன்  நட்பு ஏற்பட்டது. அதன்பின்னர், இளைஞருடன் அந்தச் சிறுமி  மாதங்களாக பேஸ்புக் மூலம் பேசி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று சந்திக்கலாம் என்று சிறுமியிடம் இளைஞர் கேட்டுள்ளார். பின்னர், திபென்யா பகுதியில் உள்ள பூங்காவில், இளைஞரும்  சிறுமியும்  சந்தித்துள்ளனர்.

அப்போது, சிறுமியை செல்போனில் கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்துள்ளார் இளைஞர். அங்கிருந்து சிறுமி தப்பிக்க முயன்றபோது, ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று  இளைஞர் சிறுமியை  பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். அவருடன் வந்த மேலும் 2 பேர் கூட்டு சேர்ந்து அந்த சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பின்னர், சிறுமியை காரில் ஏற்றிச் சென்ற 3 பேரும் ராஜபர்க் பகுதியில் சிறுமியை காரில் இருந்து வீசிச் சென்றனர். இச்சம்பவம் பற்றி சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போலீஸீல் புகாரளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில், பேஸ்புக் இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  2 பேர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.