காதலியுடன் சண்டை....பல்கலைக்கழக மாணவர் எடுத்த விபரீத முடிவு
தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவியை துப்பாக்கியால் சுட்ட மாணவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி யூனியனில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள நொய்டா என்ற பகுதியில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஞ்சு சிங் மற்றும், அதேவகுப்பில் படித்து வரும் நேஹா என்ற மாணவி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே சில நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மதியம் பலகலைக்கழகத்தின் கேண்டீனில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த அஞ்சு சிங் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காதலியை சுட்டார். காதலி நேஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, அஞ்சு சிங் கல்லூரியில் உள்ள ஆண்கள் விடுதிக்குச் சென்று துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.