வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:02 IST)

காளி மந்திரத்த சொல்லிட்டு தான் களத்துல இறங்குவேன்: கொலையாளி பகீர் வாக்குமூலம்

ஹரியானாவில் தொடர் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரிடம் பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.
ஹரியானாவில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. கொலையாளியை பிடிக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
 
இந்நிலையில் போலீஸார் தொடர் கொலை செய்த ஒரு வாலிபரை கைது செய்தனர். அவனிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது. அவன் இதுவரை 500க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளான். மேலும் 7 பேரை கொன்றுள்ளானாம்.
 
ஒவ்வொரு முறை கொலை செய்வதற்கு முன்னர் காளில் கோவிலுக்கு சென்று 108 முறை காளி மந்திரத்தை உச்சரிப்பானாம். பின்னர் தான் எல்லா வேலைகளையும் செய்வேன் என கூறியுள்ளான். இதனைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.