1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (13:54 IST)

”ரயில்வே என்னுடைய சொத்து”.. நீதிபதி கூறிய காமெடி கதை

கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமூட்டும் காமெடி கதையை கூறியுள்ளார். அந்த காமெடி கதை தற்போது பரவலாக பரவி வருகிறது.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, எச்.என்.நாகமோகன் தாஸ் சமீபத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய வாழ்நாளில் நடைபெற்ற ஒரு காமெடி கதையை கூறியுள்ளார்.

அதாவது அவர் நீதிபதியாக இருந்த சமயம், ஒரு நாள் ஒரு இளைஞர் பெங்களூருவில் இருந்து ரயிலில் மைசூருக்கு வந்தார். அப்போது அந்த இளைஞர், ரயில் நிலையத்தில் இருந்த இரும்பு கம்பிகளை தன்னுடையே எடுத்து கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த ரயில்வே காவலர்கள் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். அந்த இளைஞரிடம் ”உங்கள் படிப்பறிவு என்ன?” என்று நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இளைஞர் பட்டப்படிப்பு படித்துள்ளதாக கூறியுள்ளார்.

”பட்டபடிப்பு படித்து விட்டு ஏன் இது போன்ற காரியத்தை செய்தீர்கள்?” என கேட்டபோது, அந்த இளைஞர் ஒரு காமெடியான பதிலை அளித்துள்ளார். அதாவது ரயில்நிலையத்தில் மாட்டியிருந்த பலகை ஒன்றில்,” ரயில் நிலையத்தின் சொத்துக்கள், உங்கள் சொத்துக்கள்” என எழுதியிருந்தது.

அதனால் தான் அங்கிருந்த இரும்பு கம்பியை நான் எடுத்துக் கொண்டு வந்தேன்” என கூறியுள்ளார். இதனை கேட்ட நீதிபதி உட்பட அனைவரும் சிரித்துள்ளனர்.
இந்த கதையை கூறிய முன்னாள் நீதிபதி, ”இப்படிப்பட்ட மாணவர்களையும் நாம் உருவாக்குகிறோம் என்பதால், நாம் பல இடங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களிடம் பழகி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.