1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:13 IST)

மத்திய இணையமைச்சர் மீது வழக்குப்பதிவு.. கேரள குண்டுவெடிப்பு குறித்து சர்ச்சை கருத்து..!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
குண்டு வெடிப்பு தொடர்பாக காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளை, சமூக வலைதளத்தில் மத்திய இணையமைச்சர் ராஜூ சந்திரசேகர் கடுமையாக விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முந்தைய தினம், டொமினிக் தொலைபேசியில் யாருடனோ பேசியதாக அவரது மனைவி வாக்குமூலம் கொடுத்ததாகவும், யாருடன் பேசுகிறீர்கள் என கேட்டதற்கு, டொமினிக் கோபப்பட்டதாகவும் அவரது மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
Edited by Mahendran