1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (17:57 IST)

உல்லாசத்திற்கு வர மறுத்த காதலியை தாக்கிய காதலன்

abuse
மும்பையில் உல்லாசத்திற்கு வர மறுத்த காதலியை காதலன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் முகர்ஜி. ஒரு நிறுவனம் பணிபுரிந்து வரும் நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரை காதலித்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில், புதன் கிழமை இருவரும் மும்பையில் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். அதன்பின்னர்,  மாலையில் அங்குள்ள கடலோரப் பகுதியான பாந்த்ரா பேண்ட்ஸ்டாவில் தங்கியிருந்தனர்.

இரவு  நேரமானதும் தன்னை விடுமாறு  ஆகாஷ் முகர்ஜியிடம்  தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட, ஆகாஷ், அப்பெண்ணை அவரது வீட்டில் விடுவதாகக் கூறிய ஆகாஷ் தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், ஆகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த ஆகாஷ், அப்பெண்ணின் கழுத்தை நெரித்து, அருகில் இருந்த பாறையில் அவரது தலையை ஓங்கி அடித்து, நீரில் மூழ்கடிக்க முயன்றார்.

அருகிலிருந்த மக்கள் அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில்,  வழங்குப்பதிவு  செய்த போலீஸார் பெண் மீது தாக்குதல் நடத்திய  ஆகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.