வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (16:14 IST)

கிளாஸ் லீடர் ஆகாததால் 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

கிளாஸ் லீடராக தேர்வு செய்யப்படாததால் 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்பவரது மகன் துருவ்ராஜ்(14)  ஆர் ஆர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். 
 
இந்நிலையில் அவன் வகுப்பில் கிளாஸ் லீடர் பதவிக்காக போட்டி நடைபெற்றது. இதில் 4 மாணவர்கள் பங்குகொண்டனர். எனினும் துருவ்ராஜ் போட்டியில் தோல்வியுற்றான். இதனால் மனமுடைந்த அவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் தான் மாணவனின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது கஷ்டப்பட்டு வளர்த்த மகன், தற்கொலை செய்து கொண்டதால் அவரது தாய் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைத்தது.