நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி
நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என பிரபல செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகள் வெளியிட்டது.
இந்த நிலையில், நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர் 48044 பேரும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும், புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி பேர் உள்ளதாக தெரிவித்துள்ளது.