வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (11:28 IST)

வீட்டு பணிப்பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் கட்டாயம்

வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியம் வழங்கும் வகையில் புதிய கொள்கையை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
 

 
வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியமும், ஆண்டுக்கு 15 நாள் சம்பளத்துடன்கூடிய விடுமுறையும், பிரசவ விடுப்பும் வழங்க வகைசெய்து மத்திய அரசின் தொழிலாளர் கொள்கை தயாராகிறது.
 
மத்திய அரசின் புதிய தொழிலாளர் கொள்கை தயாராகி வருகின்றது. இதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
 
அதில், வீட்டில் தங்கி இருந்து முழு நேர பணி செய்யும் வேலைக்கார பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வழங்குவது, ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது, பிரசவ கால விடுமுறை வழங்குவது உள்ளிட்ட அமசங்கள் உள்ளன.
 
மேலும், பாலியல் தொல்லை, கொத்தடிமை முறைக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வருவது, வேலைக்காரப்பெண்கள் கல்வியை தொடர்வதற்கு, பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு, குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழிவகை செய்வது உள்ளிட்ட அம்சங்களும் இதில் அடங்கும்.
 
இது குறித்து, மத்திய தொழிலாளர் நலன் மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாவிடம் கூறுகையில், “வீட்டு பணிப்பெண்கள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பளிப்பது மிகவும் முக்கியம். சர்வதேச தரத்தில் இந்த தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும்” என கூறினார்.