1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (10:15 IST)

ஆபாச இணையதளங்கள் முடக்கம்

இந்தியாவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
 
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இணையதள சேவைகளை வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அண்மையில், ஆபாச இணையதளங்களை முடக்கி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 857 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ன.
 
அதன்படி முடக்கப்பட்டுள்ள இணையதளங்கனின் விவரம், இணையதளம் மற்றும் சமூகத்துக்கான மையத்தின் இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளன.
 
ஆனால், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
 
இந்நிலையில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 12 ன் கீழ் மத்திய அரசு ஆபாச இணையதளங்களை முடக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதற்கு பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.