1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (11:21 IST)

76 வயது மூதாட்டியை அடித்துக்கொன்ற 82 வயது முதியவர் தற்கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் 76 வயது மூதட்டியை, 82 முதியவர் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தலோன் கிராமத்தைச் சேர்ந்த தாதிராம் அர்ஜுன் உகாலே(82) மற்றும் அவரது மனைவி கீதாபாய் உகாலே(76) ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தாதிராம், கீதாபாய் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது தடிக்கம்பால் அடித்துக் கொலை செய்தார். 
 
பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.