முடிந்தது மக்களவை தேர்தல்: இன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குசதவீதம் எவ்வளவு?

vote
Last Modified ஞாயிறு, 19 மே 2019 (18:37 IST)
மக்களவை ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 11 முதல் இன்று வரை ஏழு கட்ட தேர்தலும் முடிவடைந்துவிட்டது.

இன்று மாலை 6 மணியுடன் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இந்த நிலையில் பிகாரில் 49.92% வாக்குகளும், இமாச்சல பிரதேசத்தில் 66.18% வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 69.38% வாக்குகளும், பஞ்சாப்பில் 58.81% வாக்குகளும், உத்தரபிரதேசத்தில் 54.37% வாக்குகளும், மேற்குவங்கத்தில் 73.05% வாக்குகளும், ஜார்கண்டில் 70.05% வாக்குகளும், சண்டிகரில் 63.57% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக வழக்கம்போல் மேற்குவங்கத்திலும் குறைந்தபட்சமாக பிகாரிலும் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடைசிகட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டதை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் எக்சிட்போல் முடிவுகள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :