பயங்கரவாதிகளின் தாக்குதல்; 7 அமர்நாத் யாத்திரை பக்தர்கள் பரிதாப பலி
ஒவ்வொரு வருடமும் இந்துக்கள் புனித யாத்திரையாக அமர்நாத் பனிலிங்க யாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளதாகவும், இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் ஜம்முகாஷ்மீர் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய 2 பட்டாலியன்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.