62 வயது மூதாட்டியை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்


Abimukatheesh| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:09 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 62வயது மூதாட்டியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மேற்கு வங்கம் சுந்தர்பன் மாவட்டம் சந்தேஷ்காலி என்ற கிராமத்தில் 62வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரது வீடு அருகே சிலர் தொடர்ந்து மதுகுடித்து வந்துள்ளனர். இதை அந்த மூதாட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மூதாட்டியை பழிவாங்க திட்டமிட்டு ஒருநாள் இரவு 10 மணிக்கு அந்த மூதாட்டியை அருகில் உள்ள புதிரில் இழுத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் கடந்த மாதம் 4ஆம் தேதி நடைப்பெற்றுள்ளது. மூதாட்டியை 5பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பீர் பாட்டிலை கொண்டு மூதாட்டியின் வயிறு பகுதியை சிதைத்துள்ளனர். பின்னர் அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி 27 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். 
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மூதாட்டி இறந்தது குறித்து தகவல் அறிந்த ஊர் பெண்கள் ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :