1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (09:09 IST)

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 60 சதவீதம் போலி; ஆய்வில் தகவல்

ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களில் 60% போலிகள் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இளம் தலைமுயினர் பலர் ஆன்லைன் மூலமே ஷாப்பிங் செய்கின்றனர். ஆன்லைன் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களை கவர பற்பல கலர்புல்லான ஆஃபர்களை அவ்வப்போது வெளியிடுகின்றனர். கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட, ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலை கம்மியாக இருப்பதாலும், கடைக்கு செல்ல வேண்டிய வேலை மிச்சப்படுவதாலும் பலர் ஆன்லைன் சேவையை விரும்புகின்றனர்.
 
இந்நிலையில் உத்தரப்பிரதேச செய்தி நிறுவனம், ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படும் பொருட்களில், முன்னணி நிறுவனங்கள் பெயரில் போலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்களில் 60% அளவிற்கும், உடைகள் பிரிவில் 40% அளவிற்கு போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.