புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (12:43 IST)

அதிகரித்த பக்தர்கள் வரவு... ரூ.27 கோடிக்கு விற்பனை ஆன அப்பம், அரவணை!

பக்தர்கள் வரவு காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

 
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது குறைந்திருந்தது. மேலும் சபரிமலை நிர்வாகம் குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்து வந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் குளிப்பது, தங்குவதற்கும் தடை இருந்தது.
 
இந்நிலையில் தற்போது கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பம்பை நதியில் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சபரிமலையில் போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
பக்தர்கள் வரவு காரணமாக அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மண்டல பூஜைக்காக நடை திறந்தது முதல், தற்போது வரை அப்பம், அரவணை விற்பனை மூலம் 27 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் தெரிவித்துள்ளது.