1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (20:13 IST)

6 மாத பச்சிளம் குழ்ந்தையை தீயில் வீசிய தாய்!

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 6 மாத பச்சிளம் குழந்தையை தீயில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுனா பின்குவா. இவரது மனைவி மஞ்குலி பின்குவா. இவர்களுக்கு 6 மாத பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சுனாவிற்கும் அவரது மனைவிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமைடைந்த அவரது மனைவி தனது குழந்தையை தீயில் வீசியுள்ளார்.
 
இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.