ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:13 IST)

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

Train
தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் சிறப்பு ரயில்களை இயக்க தயார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், 108 ரயில்களில் முன்பதிவின்றி செல்லக் கூடிய  பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இந்த சிறப்பு ரயில்களின் மூலம், ஒரு கோடி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran