வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (23:41 IST)

அய்யய்யோ!.. 95 சதவீத வீடுகள் பூகம்பத்தை தாங்காது

‘நாட்டில் உள்ள, 95 சதவீத வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு பூகம்பத்தை தாங்கும் திறன் இல்லை’ என, தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
 

 
பூகம்ப அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக குஜராத், பீகார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பூகம்பத்தை தாங்கக் கூடியவை அல்ல.
 
தற்போது நாடு முழுவதும், 30 கோடி வீடுகள் உள்ளதாகவும், அவற்றில் 95 சதவீத வீடுகள், பூகம்பத்தை தாங்கும் திறன் அற்றவை என்றும் தெரிவித்துள்ளது.
 

 
சமீபத்திய நில அதிர்ச்சி மண்டலம் வரைபடம் படி இந்தியாவின் நிலப்பரப்பில் 59 சதவீதம் மிதமான அல்லது கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்படையக் கூடியதாக உள்ளது தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி புதிய வரைபடம் ஒன்றையும் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.