வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (16:51 IST)

''வந்தே பாரத்'' ரயில் மீது கல்வீசித் தாக்கினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!

இந்திய நகரங்களுக்கு இடையே செல்லும்  அதிவிரைவு ரயில்கள் 'வந்தே பாரத்' ஆகும்.  'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ்  சென்னை ஐசிஎஃப்-ல் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இந்த வந்தே பாரத் விரைவு ரயில்( புது தில்லியில் இருந்து வாரணாசி வரையிலான) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில், இந்த வந்தே பாரத் ரயில்கள் மீது பயணிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தி, சேதம் விளைவிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறியதாவது: ‘சமீப காலமாக வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 9 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ கூறியுள்ளது.

மேலும், வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தி, சேதம் விளைவிப்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.