1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (15:14 IST)

இன்னும் 47 செயலிகள் தடை: சீனாவிற்கு அடுத்த ஆப்பு!!

சீனாவின் மேலும் 47 செயலிகள் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.  
 
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.  
 
தற்சமயம் மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஏற்கனவே தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் குளோனாக செயல்பட்டது என கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. பெரும்பாலும் இந்த செயலிகள் ஜூன் 29 ஆம் தேதி தடை செய்யப்படும் என தெரிகிறது.