எலிகளை காப்பாற்றிய 40 மான்கள் பலி
எலிகளை காப்பாற்றிய 40 மான்கள் பலி
சோளக் காட்டில் எலிக்கு வைத்திருந்த விஷத்தை சாப்பிட்ட 40 மான்கள் உயிரிழந்தன.
தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கும்மாடம் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளனர். அந்த பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் அவற்றை கொல்ல தீவனத்தில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து உருண்டை உருட்டி வைத்திருந்தனர்.
வனப்பகுதியில் இருந்து வயலுக்குள் புகுந்த 40க்கும் மேற்பட்ட மான்கள் அவற்றை சாப்பிட, ஒவ்வொன்றாக அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. காலையில் வயலுக்கு வந்த விவசாயிகள் மான்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சில மான்களை கால்நடை மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றனர்.