Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

4 வயது குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய மோடி, வைரல் வீடியோ


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:48 IST)
குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை பிரதமர் மோடி தனது காரை நிறுத்தி சந்திந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 
குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.
 
பிரதமரை காண சாலையின் இருபக்கங்களில் திரளான கூட்டம் இருந்தது. அங்கு சாலையோரம் தனது பெற்றோருடன் நின்றிருந்த நான்குவயது பெண் குழந்தை திடீரென மோடிக்கு டாட்டா காட்டியவாறு காரை நோக்கி குறுக்கே ஓடியது. 
 
இதைப்பார்த்த மோடி காரை நிறுத்தி அந்த குழந்தையை கொஞ்சிவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Pankaj Kumar


இதில் மேலும் படிக்கவும் :