செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (08:39 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி போல் காங்கிரஸ் வெற்றி: ப.சிதம்பரம்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஒரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியபோது, 'கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் முடிவை போலவே காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து கர்நாடகாவில் போட்டியிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்பதே காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. மொத்தத்தில் தென்னிந்தியாவில் பாஜக மிக குறைவான தொகுதிகளையே பெறும் என்பது இந்த இடைத்தேர்தல் முடிவில் இருந்து தெரிய வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.