வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (20:21 IST)

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

new parliament  India
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா  மக்களவையில் நிறைவேறியது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில்  பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடந்து வந்தது.

இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீதம்  மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு  ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.