1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (08:14 IST)

பள்ளி திறந்த இரண்டே நாட்களில் பரவிய கொரோனா: மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். இதனால் எட்டு மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக உலகில் பல்வேறு தளர்வுகள் ஏற்பட்டதையடுத்து தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது 
 
இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது என்பதும் நிபந்தனைகளுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டும், பள்ளிகள் திறந்த இரண்டே நாட்களில் 31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது 
 
இதனால் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவும் என்ற அபாயம் இருப்பதால் மீண்டும் பள்ளிகளை மூடலாமா என அம்மாநில கல்வி துறை ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது