Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெட்ரோ ரயில் எல்.ஈ.டி. திரையில் ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி


sivalingam| Last Updated: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (07:35 IST)
டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றான ராஜிவ் சவுக் என்ற நிலையத்தில் பயணிகளுக்கு ரயில் வரும் நேரத்தை தெரிவிக்கும்  எல்.ஈ.டி. திரையில் திடீரென ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக பெண்கள் அலறியடித்து ஓடிய காட்சி அனைவரையும் கவலையடைய செய்தது


 


இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டனர். முதலில் அங்குள்ள சிசிடிவி புகைப்பட வீடியோவை கைப்பற்றி  இந்த ஆபாச வீடியோ ஓடிய நேரத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் இந்த சம்வத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 3 பேர்களும், தங்கள் மொபைல் மூலமாக டிவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி அதனை ஒளிபரப்பச் செய்துள்ளதாகவும் சிசிடிவி மூலம் மெட்ரோ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக மூன்று பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க மெட்ரோ அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :