ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (10:20 IST)

விருந்தில் உணவருந்திய 3 குழந்தைகள் பரிதாப பலி

மகாராஷ்டிராவில் விருந்தில் உணவருந்திய 3 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் மானே. இவர் ஒரு புது வீட்டை கட்டியுள்ளார். 
 
தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வர சுபாஷ் தனது நண்பர்கள், உறவினர்கள், அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இந்நிலையில் சுபாஷ் வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. கிரகப்பிரவேசத்தில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் உணவருந்திய குழந்தைகள், பெரியவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் உணவில் ஏதேனும் கலக்கப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.