2ஜி மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு - இதுதான் காரணமா?

hc
Last Modified செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:08 IST)
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி மேல்முறையீட்டு வழக்கினை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
scam
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேற்று விடுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :