1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (12:38 IST)

டாடா இண்டிகாவின் 25 ஆண்டுகள்... கேக் வெட்டி கொண்டாடிய ரத்தன் டாடா!

டாடா இண்டிகாவின் 25 ஆண்டுகள்... கேக் வெட்டி கொண்டாடிய ரத்தன் டாடா!
டாடா இண்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் ரத்தன் டாடா அதனை கேக் விட்டு கொண்டாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று டாடா இண்டிகா என்பதும் இந்த கார் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் காரான டாடா இண்டிகாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
இந்த நிலையில் டாடா இண்டிகா அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதை எடுத்து தொழிலதிபர் ரத்தன் டாடா அதனை கேக் வெட்டு கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran